நாகப்பட்டினம்:கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வேத. முகுந்தனுக்குப் பதிலாக வடிவேல் ராவணன் என்பவரை புதிய வேட்பாளராக பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
முன்னதாக இதே தொகுதி அமமுக கூட்டணியில், தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக இத்தொகுதியை அமமுகவே திரும்பப் பெற்றுக்கொண்டது.