தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Farm Laws: தேர்தலுக்காகவே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - தமிமுன் அன்சாரி - தமிமுன் அன்சாரி

வடமாநிலத் தேர்தல் அரசியலுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற்றுள்ளார் என செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி

By

Published : Nov 20, 2021, 6:18 AM IST

நாகப்பட்டினம்: மனித நேய ஜனநாயகக் கட்சிப் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நாகையில் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "வடமாநிலத் தேர்தல் அரசியலுக்காக மூன்று வேளாண் சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

மேலும், ”கடந்த ஓராண்டாக உழவரின் போராட்டங்களை பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அலட்சியம் செய்தார்கள். பஞ்சாப் உழவர் தலைமையில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டம் பிரதமர், மத்திய அமைச்சர்களைப் பணியவைத்திருக்கிறது.

மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் மனித நேய ஜனநாயகக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இப்போதுவரை மோடி சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.

வட இந்திய உழவர் மிக வலிமையாக இருக்கிற காரணத்தால், தேர்தல் அரசியலுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details