மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் நடவு பணிகள் மேற்கொண்டு உள்ளனர். ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதிகளில் தீவிரமாக நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு வாரமாக மழைபெய்து வந்த நிலையில் இரண்டு நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடவுபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையில் நடவுப்பணிகள் தீவிரம் மயிலாடுதுறை, வழுவூர், பண்டாரவடை, மங்கைநல்லூர், பெரம்பர், செம்பனார்கொவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாய் நாற்றங்கால் தயார் செய்தல், நாற்றுப் பறித்து நடுதல், நிலத்தை சமன்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. நீண்ட நாள் பயிரான ஆடுதுறை-38, ஆடுதுறை-54, ஆடுதுறை-46 ஆந்திரா பொன்னி, கோ-50, IR-20 ஆகிய நெல் ரகத்தை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வருவதால் சம்பா தாளடி சாகுபடிக்கு ஏற்ற வகையில் அமையும் என்றும், இதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என்றும் கூறும் விவசாயிகள் விதை, உரம் மற்றும் இடு பொருள்களை போதுமான அளவு வேளாண்மைதுறை மூலம் தட்டுபாடின்றி தமிழ்நாடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடியோ:பருவ மழையால் அழுகிய 100 கிலோ பூக்கள் - குப்பைத் தொட்டியில் கொட்டிய அவலம்