தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2020, 5:21 AM IST

ETV Bharat / state

விவசாயிகளுக்கு 91 ஆயிரம் தென்னை கன்றுகள் வழங்க திட்டம்!

நாகை: மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் உள்ள வேளாண்மை துறையின் தென்னை பண்ணையை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு 91 ஆயிரம் தென்னை கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு  தென்னை கன்றுகள் வழங்க திட்டம்
விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள் வழங்க திட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வேளாண்மை துறையின் தென்னை நாற்றங்கால் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் தற்போது விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தென்னை நாற்றங்கால் 1.5 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னை நாற்றங்கள் பண்ணையை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு மேற்கொண்டார். வறட்சி, வெள்ளை ஈ பூச்சி தாக்குதல்களை தாங்கி வளரக்கூடிய நெட்டை ரக தென்னங்கன்றுகள் பார்வையிட்டார்.

பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “91 ஆயிரம் தென்னை கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 45 ஆயிரம் கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் குத்தாலத்தில் 11 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறுகிறது.

நேரடி நெல் விதைப்பு இயந்திர நடவு முறைகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: ஐநாவின் நல்லெண்ண தூதரான முடிதிருத்தகத் தொழிலாளியின் மகள் நேத்ரா!

ABOUT THE AUTHOR

...view details