தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோதாவரியில் இருந்து கடைமடைக்கு விரைவில் உபரி நீர் - நிதின் கட்கரி

புதுச்சேரி: கோதாவரியில் இருந்து கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிதின் கட்கரி ஒரு மாணவனுக்கு பட்டம் வழங்கும் காட்சி
அமைச்சர் நிதின் கட்கரி ஒரு மாணவனுக்கு பட்டம் வழங்கும் காட்சி

By

Published : Feb 28, 2020, 10:40 PM IST

புதுச்சேரி மாநில தேசிய தொழில் நுட்பக்கழகத்தின் 6ஆவது பட்டமளிப்பு விழா, காரைக்கால் திருவேட்டக்குடியில் அமைந்துள்ள நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் 116 இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் நிதின் கட்கரி ஒரு மாணவனுக்கு பட்டம் வழங்கும் காட்சி

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய தொழில்நுட்ப கழகத்தின் மாணவர்கள் உருவாக்கிய, சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் உலர் தள கருவாடு இயந்திரத்தை காரைக்கால் மீனவர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், "நீரின் முக்கியத்துவத்தை பூர்த்தி செய்யவே, கடலில் வீணாகும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க, கோதாவரியில் இருந்து கடைமடைக்கு ரூபாய் 60,000 கோடி மதிப்பில் கிருஷ்ணா பெண்ணாறு வழியாக 1252 கிலோமீட்டரில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. மீத்தேன், எத்தனால், பையோ டீசல் ஆகியவைகளால் இயங்கும் 400 நவீன பேருந்துகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 நாட்களில் தொடங்கப்படும். இதனால் அரசுக்கு வருடத்திற்கு 60 கோடி ரூபாய் மிச்சமாகும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:கால்நடை மருந்தகங்களுக்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details