தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் - ரூ. 2 லட்சம் மதிப்பிலான வலை பறிப்பு - கடற்கொள்ளையர்கள்

நாகப்பட்டினம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி முனையில் மீனவர்களின் வலை உள்ளிட்ட பொருள்களை பறித்துக்கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள்
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள்

By

Published : Sep 25, 2021, 10:23 PM IST

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மகன் சிவகுமார், சிவா ஆகிய மூரும் வேதாரண்யம் சன்னதி கடலுக்கு கிழக்கே 10 நாட்டிக்கல் தொலைவில் இரவு நேரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மூன்று படகில் வந்த ஏழு இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் ஏறி சின்னத்தம்பியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். அப்போது, சிவகுமார் தனது தந்தை சின்னத்தம்பியை காப்பாற்ற முற்பட்டார். இதனால், கடற்கொள்ளையர்கள், மீனவர் சிவாகுமாரின் தலையில் மூன்று இடங்களில் கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் சிவாவிற்கு இடது கால் தொடை, இடது கை ஆகியவற்றில் இரும்பு பைப்பால் தாக்கியதில் உள்காயம் ஏற்பட்டது. சின்னத்தம்பிக்கு இடுப்பு பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளது.

மீனவர்களை விரட்டியடித்த கடற்கொள்ளையர்கள்

மீனவர்களை தாக்கி மீன்பிடி வலைகள், டார்ச் லைட், சிக்னல் லைட் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துக் கொண்டு அங்கிருந்த மீனவர்களை விரட்டியடித்தனர்.

பின்னர், கரை திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள்

இலங்கை கடற்கொள்ளையர்களால் கடந்த மூன்று மாதங்களாக தாக்கப்படுவதை ஒன்றிய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இது குறித்து மீனவர்கள், வேதாரண்யம் கடலோர காவல்படை குழுமத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:நடுக்கடலில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வலைகள் பறிப்பு - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

ABOUT THE AUTHOR

...view details