சுருக்கு மடி வலைக்கு பயன்படுத்தும் பைபர் படகு தீ வைப்பு...! - Naga District News
09:51 July 18
சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுருக்கு மடி வலைக்கு பயன்படுத்திய பைபர் படகுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரியும் - கடலும் சங்கமிக்கும் இடத்தில் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் தனக்கு சொந்தமான சுருக்குமடி வலைக்கு பயன்படுத்தும் பைபர் படகினை நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (17.07.20) இரவு ரஞ்சித் என்பவரிடம் சுருக்குமடி வலைக்கு பயன்படுத்தும் பைபர் படகு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தகவலறிந்து சென்ற ரஞ்சித் தீயை அணைத்துவிட்டு பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதுகுறித்து பூம்புகார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!