தமிழ்நாடு அரசு கடந்த 2017ஆம் ஆண்டு நாகை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை பெட்ரோலியம் மண்டலத்திற்காக கையகப்படுத்தியது. அதற்கு டெல்டா மாவட்டங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்த பெட்ரோலியம் மண்டல அரசாணையை ரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தொடர் அறிவிப்புகளால் டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.