நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், முன்னதாக மயிலாடுதுறை காவிரி பயணியர் இல்லத்திற்கு சென்றார். அப்போது, மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், அம்மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை - துணை முதலமைச்சரிடம் மனு! - Sirkazhi Assembly Member Bharathi Home function
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம், அம்மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க துணை முதலமைச்சரிடம் மனு!
பின்னர், நவக்கிரக கோயில்களில் ஒன்றான திருவெண்காடு புதன் கோயிலில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு, தங்கமணி, சரோஜா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
TAGGED:
Lawyors Petition to OPS