தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவ குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் மனு - ஈடிவி பாரத்

சீர்காழி அருகே ஆறு மீனவ குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : Sep 3, 2021, 7:05 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் நிலவன். இவர் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவர் தனது சகோதரர்களான கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா ஆகிய ஐந்து பேருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு வெங்கலத்தாலான படிக்கட்டை நன்கொடையாக அளித்துள்ளனர். அதில் தங்களது பெயர்களைப் பொறித்துள்ளனர்.

இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக நிலவன், கர்ணன், விஜயகுமார் உள்ளிட்ட ஆறு பேரின் குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரிடம் மனு

இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்டவர்கள் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த செய்திகள் வெளியானதை அடுத்து தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது. மேலும் ஆறு வாரத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிக்கைத் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 31ஆம் தேதி சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஈமு கோழிப் பண்ணை மோசடி - 40 லட்சம் ரூபாய் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details