ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்கக் கோரி மனு - ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்கள்
நாகப்பட்டினம்: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி புரட்சி தமிழர் மக்கள் கழகம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
புரட்சி தமிழர் மக்கள் கழகம் சார்பில், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், வேளாங்கண்ணி பேரூராட்சியில் அமைந்துள்ள இரஜதகிரீஸ்வரர் கோயில் சொத்துக்களை பலர் போலி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்தி விற்பனை செய்வதும், கட்டடங்கள் கட்டி சொந்த பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
இதேபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட குளங்கள் ஆக்கிரமிப்புக்காரர்களால், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளது.
இதுபோன்று மாவட்டத்தில் பல்வேறு கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும், இவற்றை உடனடியாக ஆக்கிரமிப்புக்காரர்களிடமிருந்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை புரட்சி தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயரிடம் அளித்தனர்.