தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கோரி தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மனு - மயிலாடுதுறை தமிழ் செய்திகள்

மயிலாடுதுறை: மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மனு
தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மனு

By

Published : Apr 19, 2021, 4:53 PM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக நாளை (ஏப்ரல் 20) முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 19) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மாவட்டத் தலைவர் நக்கீரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், "அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோயில் விழாக்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை’ - மகேஷ்குமார் அகர்வால்

ABOUT THE AUTHOR

...view details