நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இங்கு அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்த நாயகி சமேத தாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோயில், பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான தலமாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களில் பாடப்பட்ட இக்கோயில், ராமானுஜர், மணவாள மாமுனிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாக குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் குடமுழுக்கு இன்று யாகசாலை பூஜையுடன் நிறைவுற்று, வேத விற்பன்னர்கள் திரு மந்திரங்கள் ஓத கோயிலில் சுற்றி அமைந்துள்ள அனைத்து கும்ப கலசத்தின் மீது புனித நீர் ஊற்ற மாபெரும் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.