தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளைமுதல் வெளிமாநில, மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி! - Permission for devotees in Velankanni

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளைமுதல் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா
புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா

By

Published : Sep 8, 2020, 1:36 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய, இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்றிரவு (செப். 7) நடைபெற்றது. இதில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நவநாள் திருப்பலி, மாதா மன்றாட்டு, கூட்டுப்பிரார்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து, தேர் தூய்மைச் செய்யப்பட்டு பிரார்த்தனைகளுக்குப் பிற்பாடு பவனி கொண்டுசெல்லப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சப்பரம் என அழைக்கப்படும் தேர் பவனி வழக்கமாக வலம்வரும் கடற்கரைச்சாலை, ஆரியநாட்டுத்தெரு, உத்திரியமாதா தெரு உள்ளிட்ட வீடுகளைத் தவிர்த்து, ஆலயத்தினை மட்டும் சுற்றிக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சப்பரங்களில் புனித மிக்கேல் அதிதூதர், சூசையப்பர், ஆரோக்கிய அன்னை ஆகியோரின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

சப்பர பவனி எனும் தேர்பவனி

மேலும், இன்று மாலை (செப்டம்பர் 8) கொடியிறக்க நிகழ்ச்சியுடன் இந்த விழா நிறைவுபெறுகிறது. இதில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், பக்தர்கள் நுழைய முடியாத வகையில் மாவட்ட காவல் துறை சார்பாக 9 இடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே, விழா நிறைவுபெறுவதை அடுத்தும், தமிழ்நாடு அரசு வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்தும் நாளை காலைமுதல் பிற மாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா

குறிப்பாக, நாளைமுதல் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன. வெளிமாநில, மாவட்ட பக்தர்களுக்கு தடை இருந்தும் தற்போது வரை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இருப்பினும், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பக்தர்களின்றி பாதிரியார்கள் மட்டுமே கலந்துகொண்டு விழா எளிமையாக நடைபெற்றது.

இதையும் படிங்க:வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: ஐந்தாவது நவநாள் தேர்த்திருவிழா

ABOUT THE AUTHOR

...view details