மயிலாடுதுறை : சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, விபூதி, குங்குமம் வைத்துள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து சீர்காழி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலை முன் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிரா பழுதடைந்துள்ளதால், பெரியார் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகளை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
காவல் நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு அவமதிப்பு - போலீஸ் விசாரணை! இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153ஏ)-வின் கீழ் சீர்காழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெரியார் சிலை அருகே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியார் சிலை அவமதிப்பு செய்துள்ளதை கண்டிக்கும் வகையில், நேற்று (மார்ச்5) தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அடையாளம் தெரியாத சமூக விரோதிகளை நபர்களை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு: விசிகவினர் சாலை மறியல்