மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 5ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவமானது பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சீர்காழி அருகே கொடகாரமூலை கிராமத்தை சேர்ந்த மனோகரன் (55) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரியார் சிலைக்கு அவமதிப்பு : ஒருவர் கைது! - Nagapattinam District News
சீர்காழியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, விபூதி, குங்குமம் இட்டு அவமதிப்பு செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் சிலைக்கு அவமதிப்பு