தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல்” - ஓ.எஸ். மணியன் - mayiladuthurai district demand

நாகை: மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

minister

By

Published : Nov 1, 2019, 11:49 AM IST

Updated : Nov 1, 2019, 12:03 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில், படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக நலத்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஆயிரத்து முன்னூற்று நாற்பத்தி மூன்று (1,343) பெண்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்புள்ள திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ”மயிலாடுதுறையை மாவட்டம் ஆக்கவேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை 110 சதவீதம் நியாயமானது. நம் மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற அவலநிலை இல்லை. இதுகுறித்து, மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று முதலமைச்சரை சந்தித்து வற்புறுத்திக் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

இதனையடுத்து, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிப்பதாக முதலமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஒ.எஸ். மணியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்எல்ஏ பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை பாதாளச் சாக்கடை பிரச்னை...மக்கள் வேதனை !

Last Updated : Nov 1, 2019, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details