மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, கீழமூவர்க்கரை மீனவக் கிராமத்தில் முருகேஸ்வரி என்ற பெண்ணும் அவரது உறவினரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்தனர். பலமுறை கிராம மக்கள் எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாமல், சாராய விற்பனை செய்துவந்தனர்.
இவர்கள் தற்போதைய கரோனா தொற்று ஊரடங்கிலும் தடையை மீறி, புதுச்சேரி மாநில சாராயத்தை விற்பனை செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் முருகேஸ்வரி வீட்டை முற்றுகையிட்டு, வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில சாராயத்தைக் கீழே ஊற்றி, தீ வைத்தனர்.