மயிலாடுதுறை அருகே காளிசெட்டித்தோப்பு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வயலில் அரசு அனுமதி பெறாமல் மணல் எடுப்பதாகக் கூறி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்னை ஏற்படுவதாகவும், மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் காளி செட்டித்தோப்பு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வருவாய் துறை அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.