தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நாற்று நட்டு போராட்டம் செய்த மக்கள்!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

Public protest on the road
Public protest on the road

By

Published : Nov 21, 2020, 1:56 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தொழுதலாங்குடி ஊராட்சியில் கீழ சர்வமானிய தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி குடியிருப்பு அருகே தனியார் கேஸ் குடோன் 15 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

அதன்காரணமாக சிலிண்டர்கள் ஏற்ற லாரிகள் அடிக்கடி வந்து செல்வதால் 500 மீட்டர் கிராமப்புற சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

நாற்று நட்டு போராட்டம் செய்த மக்கள்

இது குறித்து, சாலையை சீரமைக்க கோரி கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கவில்லை. திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இப்பகுதிக்கு சாலை சரியில்லாத காரணத்தால் 108 வாகனம், ஆட்டோக்கள் கூட வர மறுப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனை கண்டித்து சாலையில் நாற்று நட்டு அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்து வந்த குத்தாலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: டாடா காபி தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

ABOUT THE AUTHOR

...view details