நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குளிச்சாறு கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பு குழாய்கள் பழுதடைந்ததால் கடந்த ஆறு மாதங்களாக முறையாக தண்ணீர் வரவில்லை. எனவே அவர்கள் வீட்டின் முன்பு குழிதோண்டி தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
ஆனால், அந்த குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வருவதாகவும் அதை குடிப்பதால் காய்ச்சல் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கூறி குளிச்சாறு மெயின்ரோட்டில் அரசு பேருந்தை வழிமறித்து கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.