தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி மக்கள் போராட்டம்! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை அருகே நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரிசியை கிராம மக்கள் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

அரிசியை சாலையில் கொட்டி போராடிய மக்கள் தொடர்பான காணொலி
அரிசியை சாலையில் கொட்டி போராடிய மக்கள் தொடர்பான காணொலி

By

Published : Aug 20, 2021, 9:06 PM IST

மயிலாடுதுறை:ஆனைமேலகரம் ஊராட்சியில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஆக.20) தரமற்ற அரிசி வழங்குவதைக் கண்டித்து, நியாய விலைக்கடையின் முன்னர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்கனவே வழங்கப்பட்ட தரமற்ற அரிசியை சாலையில் கொட்டிய பொதுமக்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அரிசியை சாலையில் கொட்டி போராடிய மக்கள் தொடர்பான காணொலி

அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பேசுகையில், "கடந்த ஒரு ஆண்டாக கறுப்பு , மஞ்சள் நிறத்தில் துர்நாற்றம் வீசும் அரிசியையே நியாய விலைக்கடையில் கொடுத்து வருகின்றனர். பலமுறை அலுவலர்களிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, குத்தாலம் காவல்துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:தொடர் வழிப்பறி - சிசிடிவி மூலம் சிக்கிய இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details