மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மருதங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலஞ்சேரி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இங்கு நீண்ட வருடங்களாக சாலைக்கு தார் போடாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் அன்றாட தேவைக்கு சென்றுவர, மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல சிரமமாக இருப்பதால், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தார்ச்சாலை அமைக்க கோரி வீடுகளில் கறுப்பு கொடி கட்டி போராட்டம் இதுதொடர்பாக சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பலமுறை மனு அளித்தும் தற்போதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாலை வசதி அமைத்துத் தராத ஊராட்சி மன்ற தலைவரையும், அரசு அலுவலர்களையும் கண்டித்து கிராம மக்கள் தங்களது வீடுகளில் கறுப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆலஞ்சேரி கிராமத்தில் தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.