கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் இப்பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கரோனா குறித்த முழு விவரங்களும் மக்களுக்கு தெரிய வேண்டும் - திமுகவினர் மனு! - கரோனா குறித்த முழுவிபரமும்
நாகை : கரோனா தொற்று குறித்த முழு விவரங்களையும் மக்களுக்கு நாள் தோறும் தெரியப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.
dmk-petition
இந்நிலையில் நாகை மாவட்டத்தில், கரோனா குறித்த முழுமையான விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்துபடுவதில்லை என்றும், இதனால் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு அரசு உரிய தகவல்களை பொது மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கோரியும் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திமுகவினர் இன்று மனு அளித்தனர்.
Last Updated : Jul 5, 2020, 6:09 PM IST