தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 29, 2020, 6:58 AM IST

ETV Bharat / state

38ஆவது மாவட்டமாக உதயமான மயிலாடுதுறை: மக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை: மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்கியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

people happy on new district mayiladuthurai
மயிலாடுதுறை புதிய மாவட்டம்; மக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை:தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாகத் தொடங்கிவைத்தார். இதன்மூலம் மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கனவு நனவாகியுள்ளது.

நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஜூலை 15ஆம் தேதி மாவட்டச் சிறப்பு அலுவலராக லலிதாவும், எஸ்பியாக ஸ்ரீநாதாவும் நியமிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து எல்லைகளை வரையறுக்கும் பணியில் லலிதா ஈடுபட்டார். இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை இன்று முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார். புதிய மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழிலும், விவசாயமும் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி

மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,172 சதுர கிலோமீட்டர்கள். இதில், விவசாயம் 1,65,550 ஏக்கர் சாகுபடி பரப்பில் நடைபெறுகிறது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஒன்பது லட்சத்து 18 ஆயிரத்து 356ஆகும். மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்கு கீழ் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாக்கள் அமைந்துள்ளன. மாவட்டத்தில் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட 26 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மீன் ஏற்றுமதி நடைபெறுகிறது.

பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் புராதன சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. மேலும், பாடல் பெற்ற சிவ தலங்கள், திவ்ய தேசங்கள் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் நிறைந்த ஆன்மிக மாவட்டமாகவும் திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க 2 டிஎஸ்பிகளுக்கு கீழ் 14 காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அமைந்துள்ளன. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயிலாடுதுறை மாவட்டம் நிறைவேறியது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவான வரலாறு

ABOUT THE AUTHOR

...view details