தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்புகளில் புகும் ஆற்று நீரை தடுக்க சுவர் அமைக்க கோரிக்கை!

நாகை: குடியிருப்புகளில் உட்புகும் ஆற்று நீரை தடுக்க, தடுப்பு சுவர் அமைத்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தரங்கம்பாடி பேரூராட்சியை சேர்ந்த மக்கள்‌ புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளனர்‌

நாகை
நாகை

By

Published : Jul 7, 2020, 1:10 AM IST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த விநாயகர்பாளையம், ராமானுஜநாயக்கர்பாளைம், சம்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்பு பகுதியின் அருகே, கண்ணப்பமூலை உப்பனாறு செல்கிறது. இந்த ஆற்று நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதை தடுக்கும் விதமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பு சுவரானது தற்போது பழுதடைந்துள்ளது.

இதனால் மழை காலங்களிலும், கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் போதும் கரைப்பகுதிகள் இருபுறமும் தடுப்பு இல்லாததால் ஆற்று நீரானது குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுமட்டுமின்றி நிலத்தடி நீர் உப்பு நீராகவும் மாறிவிடுகிறது. இதனால், மழைக்காலம் தொடங்கும் முன்னரே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தடுப்பணை கட்டி தரவேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஹீம் சிங்குக்கு அடுத்த சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details