நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
இதையடுத்து இன்று நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர், அதிகாலை நூற்றுக்கணக்கான நாட்டு படகுகளுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள் மீனவர்களின் வலைகளில் சிக்கிய அயிலை, பாறை, காலா, வாலை, வஞ்சிரம், மத்தி, இரால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் நாகை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
நீண்ட நாள்கள் மீன்கள் கிடைக்காத ஏக்கத்தில் இருந்த மீன் பிரியர்கள், அங்கு குவிந்து தங்களுக்குத் தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க:ரூ. 70 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்!