தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திமுக செய்யும் கிம்மிக்ஸ் வித்தைகளை மக்கள் ரசிக்கவில்லை’ - எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை: முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்திப்போம் என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

bjp
bjp

By

Published : Feb 22, 2021, 2:18 PM IST

மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் நியமன எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட தகுதியுள்ளது. அதற்கு சட்டத்திலும் வழிவகை உள்ளது. பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர மத்திய அரசு விரும்பினாலும், வருமான இழப்பை காரணம் காட்டி மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பெட்ரோல்-டீசல் விலை கட்டுப்படுத்தப்படும்.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தேர்தல் களத்தை சந்திப்போம். மு.க.ஸ்டாலினின் பிரச்சாரங்களால் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். விடியல் தரப்போகிறோம் என்று கூறும் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் யுக்திகளை பிரசாந்த கிஷோரின் ஐபேக் டீம் வழங்கியதால் தான், அக்கட்சியில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் வெளிவருகின்றனர். தமிழகத்திலும் ஐபேக்தான் திமுகவை ஆட்டுவிக்கிறது. அவர்கள் செய்யும் கிம்மிக்ஸ் வித்தைகளை மக்கள் நம்பவில்லை. அராஜகமற்ற கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த தகுதி எடப்பாடி பழனிசாமிக்குதான் உள்ளது.

’திமுக செய்யும் கிம்மிக்ஸ் வித்தைகளை மக்கள் ரசிக்கவில்லை’

இதையும் படிங்க: குதிரை வண்டியில் திமுகவினர் ஊர்வலம்! - பொதுமக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details