தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் நகராட்சி அலுவலகம் முற்றுகை: வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முயற்சி! - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை: சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் செல்லும் கழிவுநீரால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முயன்றனர்.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

By

Published : Mar 4, 2021, 7:16 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குள்பட்ட 10ஆவது வார்டில் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் நகராட்சி கட்டண கழிப்பிடத்தின் கழிவுநீரை பொதுமக்களுக்கு இடையூறாக சுகாதாரச் சீர்கேடு, நோய்த்தொற்று ஏற்படும் வகையில் 10ஆவது வார்டு தெருக்களில் திறந்துவிடப்படுகிறது.

இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று (மார்ச் 4) நகராட்சி அலுவலகம் முன்பு தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முயன்றனர்.

இதனையடுத்து கழிவுநீர் தெருக்களில் ஓடுவதைப் பார்வையிட வந்த நகராட்சி ஆணையர் தமிழ்செல்வியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் - குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details