மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை வார்டில் கடந்த 8 மாதங்களாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ள நிலையில் அந்த வார்டில் 15 கரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். கரோனா நோயாளிகள் குறைந்துவிட்ட காரணத்தால் அங்கு இருந்த 15 நபர்களும் அருகே உள்ள பெண்கள் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வார்டு பாதுகாப்பு தடுப்புகள், கரோனா எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமலும் பொது வார்டு போல உள்ளது.
கரோனா நோயாளிகள் பொது வார்டுக்கு மாற்றம் இதனால் மற்ற நோயாளிகளும், அவரது உறவினர்களும் இந்த வார்டுக்கு அலட்சியமாக வந்து செல்கின்றனர். இதனால் மற்றவர்களுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வார்டில் எந்தவித அடிப்படை வசதி இல்லை எனவும் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் கூறிகையில், "கரோனா நோயாளிகள் குறைவாக உள்ளதால், நோய் அறிகுறிகள் உள்ளவர்களை வேறு வார்டுகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த வார்டில் இரண்டு நாட்களில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை - போடி அகல ரயில் பாதை: உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம்