தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் நடமாடும் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ - nation lockdown

நாகை: 144 தடை உத்தரவையடுத்து நடமாடும் ஏடிஎம் சேவையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

people-appreciate-mobile-atm-in-nagai
people-appreciate-mobile-atm-in-nagai

By

Published : Apr 8, 2020, 7:16 PM IST

Updated : Apr 8, 2020, 7:50 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு தவிர வெளியே வரவும், பொது இடங்களில் கூடவும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம்மில் எடுப்பதற்குக் கூட மக்கள் வெளியேற அச்சமடைகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் பாரத ஸ்டேட் வங்கி நகர்ப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் எடுக்கவரும் மக்கள் கிருமிநாசினி மருந்தினைக்கொண்டு கைகளைக் கழுவிய பின்னரே ஏடிஎம்மிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நடமாடும் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த சேவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: நடமாடும் ஏ.டி.எம்: வரவேற்கும் மக்கள்

Last Updated : Apr 8, 2020, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details