நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் கடற்கரைப்பகுதியில் மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. மீனவர்கள் அதனைக் கண்டு அச்சமடைந்து அதனருகில் செல்லாமல் உருளைப்போல இருந்ததால் வெடித்துவிடுமோ என நினைத்து சீர்காழி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
கரை ஒதுங்கிய விநோத பொருள்: வெடிகுண்டு பீதியில் மக்கள்! - நாகப்பட்டினத்தில் கரை ஒதுங்கிய வினோத பொருள்: வெடிகுண்டு பீதியில் மக்கள்
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே மீனவ கிராமத்தில் வினோத பொருள் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள் வெடிகுண்டாக இருக்கும் என்று எண்ணி அச்சமடைந்தனர்.
கரை ஒதுங்கிய வினோத பொருள்
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்தப் பொருளைக் கைப்பற்றி பார்த்ததில் சிலிண்டர் வடிவில் ஒரு அடி உயரத்தில் இருந்தது தெரியவந்தது. மேலும், வெடிக்கக்கூடியதா எனக் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சமூக இடைவெளியை மீறும் மீனவர்கள் - கரோனா பரவும் அபாயம்