தமிழ்நாடு

tamil nadu

இரும்பு உருக்கு ஆலையில் ஏற்படும் புகை: நோய்களால் அவதிப்படும் மக்கள்

குத்தாலம் அருகே தனியார் இரும்பு உருக்கு ஆலையில் ஏற்படும் புகையால் கிராம மக்கள் நோய்வாயால் அவதிப்பட்டுவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

By

Published : Dec 14, 2021, 7:20 PM IST

Published : Dec 14, 2021, 7:20 PM IST

ETV Bharat / state

இரும்பு உருக்கு ஆலையில் ஏற்படும் புகை: நோய்களால் அவதிப்படும் மக்கள்

இரும்பு உருக்கு ஆலையில் ஏற்படும் புகை
இரும்பு உருக்கு ஆலையில் ஏற்படும் புகை

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா மருதூர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான ஓபிஜி இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டுவருகிறது. இங்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்படும் இரும்புப் பொருள்களை உருக்கி ரயில் தண்டவாளம், இரும்பு கம்பிகள், தகடுகள் உள்ளிட்ட பொருள்கள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பழைய இரும்புப் பொருள்களை உருக்கி கம்பிகளாக மாற்றம் செய்யும்போது அதிலிருந்து அதீத கரும்புகையானது வெளிவருவது வழக்கம். இந்தப் புகையினை பில்டர்கள் அமைத்து உயரமான புகைப்போக்கி மூலம் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வண்ணம் வெளியேற்றப்பட்டுவந்தது.

நோயால் அவதிபடும் மக்கள்

ஆனால், கடந்த மூன்று மாத காலமாக பில்டர், புகைப்போக்கியில் பழுது காரணமாக இரும்பு உருக்கு ஆலையிலிருந்து வெளியேறும் புகையானது சரியான முறையில் வெளியேறாமல் ஆலையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள், கிராமப் பகுதிகளில் சூழ்ந்து புகை மண்டலமாகக் காட்சியளித்துவருகிறது.

மேலும், இரும்பு உருக்கு ஆலையிலிருந்து வெளியேறும் அதீத ஆபத்தான புகையால் ஆலையின் அருகேவுள்ள மருத்தூர், தேரழுந்தூர், கோமல், கோட்டகம், கொழையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்திலுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் எனப் பலரும் ஆஸ்துமா, மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இரும்பு உருக்கு ஆலையில் ஏற்படும் புகை

வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக மாசு கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் துறையினர் இப்பகுதியை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வேதனை தெரிவிக்கும் கிராமவாசி

இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் துறை நாகை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலம் கூறுகையில், “இது குறித்து எவ்வித புகாரும் வரவில்லை, இந்தப் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வுசெய்து பாதிப்பு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:போதையில் தகராறு செய்த காவலர் கைது

ABOUT THE AUTHOR

...view details