நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாட்டின் இயற்கை வளம், கனிம வளம் குறித்து பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் தொடக்கிவைத்தார்.
கண்முன்னே கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள்! - பழநெடுமாறன் - மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டம்
நாகப்பட்டினம் : நம் முன்னோர்கள் பாதுகாத்த கனிம வளங்கள் நம் கண்முன்னே கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது என, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் கூறினார்.
கண்முன்னே கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள்,
பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆற்று மணல், கனிம வளம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அதிகளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த கனிம வளங்கள் நம் கண்முன்னே கொள்ளையடிக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது எனவும் அவர் கூறினார்.
மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தால் விரைவில் இந்தியா சோவியத் யூனியன் போல பல துண்டுகளாக சிதறுண்டு போகும் என பழநெடுமாறன் கூறினார்.