தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் நிழற்குடை, ஆட்டோ கொட்டகையை திறந்துவைத்த எம்எல்ஏ! - ஆட்டோ நிறுத்தம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடை, ஆட்டோ நிறுத்தம் ஆகியவற்றை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் திறந்துவைத்தார்.

பயணிகள் நிழற்குடை, ஆட்டோ கொட்டகையை திறந்துவைத்த எம்எல்ஏ!
பயணிகள் நிழற்குடை, ஆட்டோ கொட்டகையை திறந்துவைத்த எம்எல்ஏ!

By

Published : Oct 16, 2020, 3:52 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பொறையார் கடைவீதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதனை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பொறையாறு புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாட்டில் முதல் முதலாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பேரூராட்சி பொது நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள ஆட்டோ நிறுத்தும் கொட்டகையையும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details