தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்! - Mayiladuthurai

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் துலா உற்சவத்தையொட்டி தற்போது திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்...ஏராளமான பக்தர்கள் வழிபாடு
பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்...ஏராளமான பக்தர்கள் வழிபாடு

By

Published : Nov 16, 2022, 4:33 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் திருநாளான இன்று (நவ.16) திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. அந்த வகையில் தற்போது கோயிலில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேர் நான்கு வீதிகளைச்சுற்றி 1 மணி அளவில் மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்...ஏராளமான பக்தர்கள் வழிபாடு

இதையும் படிங்க:ஆண்டுக்கு 3000 இந்தியர்களுக்கு சிறப்பு விசா - பிரிட்டன் பிரதமரின் ஹேப்பி நியூஸ்!

ABOUT THE AUTHOR

...view details