தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தான நிலையிலுள்ள பள்ளி கட்டடங்களை இடிக்க கோரிக்கை

மயிலாடுதுறை அருகே மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்களை இடிக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆபத்தான நிலையிலுள்ள பள்ளி கட்டடங்கள்
ஆபத்தான நிலையிலுள்ள பள்ளி கட்டடங்கள்

By

Published : Dec 18, 2021, 7:42 PM IST

மயிலாடுதுறை:மணல்மேடு பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 656 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளிக்கூடத்தில் மூன்று கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது.

மாணவர்களின் அச்சம்

பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து இரண்டு கட்டிடங்களை இடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வரை கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளதாகவும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தில் மாணவர்கள் குடிநீர் அருந்த வேண்டியுள்ளதால் மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு சமையல் கூடம் இடியும் நிலையில் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, இரண்டு தளங்கள் உள்ள புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.

இதேபோல் சமையற்கூடமும் பழுதடைந்துள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

ABOUT THE AUTHOR

...view details