மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவரான தலித் இளம்பெண் பிரியா பெரியசாமியை சாதிரீதியாக அவமானப்படுத்திய ஊராட்சி மன்றத் துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார் மனுவில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதிரீதியாக அவமானப்படுத்திய ஊராட்சி மன்றத் துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணைபோன ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளனர்.