தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணியில் விமரிசையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி! - palm sunday

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேளாங்கண்ணியில் விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி
வேளாங்கண்ணியில் விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி

By

Published : Mar 28, 2021, 10:58 AM IST

இயேசு கிறிஸ்து 40 நாள்கள் உபவாசம் இருந்ததை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் ’புனித வெள்ளி ’தினத்திற்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம், 17ஆம் தேதி ’சாம்பல் புதன்’ அன்று தவக்காலம் தொடங்கியது.

தொடர்ந்து, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ’புனித வெள்ளி’ தினம் அனுசரிக்கப்படுகிறது, இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையின்போது வழக்கமாக குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடத்துவது வழக்கம். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று (மார்ச்.28) கொண்டாடப்படுகிறது.

வேளாங்கண்ணியில் விமரிசையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி

முன்னதாக, பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், பங்கு தந்தைகளும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாகச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

இதையும் படிங்க:நாகையில் வீட்டருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரில் ஏற்பட்ட திடீர் தீ!

ABOUT THE AUTHOR

...view details