மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
அதில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு சம்பா உற்பத்தி அதிகமானதால் 27 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன.