நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோயில், இன்று நான்காம் ஆண்டு பால்குட திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், மஞ்சளாடை உடுத்தி, பால்குடம் சுமந்து சென்றனர். மேள வாத்தியங்களுடன் நம்பியார் நகர் புதிய ஒளிமாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தது.