நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வீரசோழன் ஆற்றிலிருந்து பிரிந்துச் செல்லும் கோவாஞ்சேரி பாசன வாய்க்கால் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கடலாழி ஆற்றில் கலக்கும் இந்த வாய்க்கால் கோவாஞ்சேரி - ஏரளாச்சேரி ஆகிய இரண்டு கிராமங்களின் விவசாயப் பாசன வாய்க்காலாகவும், அப்பகுதிகளிலுள்ள 18 குளங்களுக்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "இந்த வாய்க்கால் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு 300 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டுவந்தது. இந்த நிலையில் வாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. அதனால் வாய்க்காலில் சிலர் ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். 10 அடி அகலம் கொண்ட வாய்க்கால் தற்போது 3 அடியாக குறுகி விட்டது.