புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தனியார் பேருந்தானது நாகை மாவட்டம் பொறையாறு வழியாக சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
உடனடியாக சக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொறையார் காவல் துறையினர் பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
Over 10 injured as private bus topples in Nagai, நாகையில் அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிதம்பரத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் நடராஜன்(39) பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், லேசான காயமடைந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து பெறையார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!