தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திதி கொடுத்த அமைச்சர்! - கோடியக்கரையில் ஜெயலலிதாவிற்கு திதி

நாகை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அவருக்கு கோடியக்கரையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் திதி கொடுத்தார்.

O.S. Maniyan
O.S. Maniyan

By

Published : Dec 4, 2020, 1:27 PM IST

மறைந்த முதலமைச்சரும் அதிமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் இன்று (டிச. 04) நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திதி கொடுத்து, பிண்டங்களை கடலில் கரைத்து நீராடினார். நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திதி கொடுத்த ஓ.எஸ். மணியன்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ். மணியன், “தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலைச் சந்திக்கலாம். அதனால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
யார் வந்தாலும் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைக்கும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details