தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த செலவில் பொங்கல் பரிசு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அதிமுக கவுன்சிலர் - Nagai admk counsilor

நாகை மாவட்டத்தில் தேர்தல் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில், தனது சொந்த செலவில் அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் 22ஆவது வார்டு மக்களுக்கு ரூ.500 ரொக்கப் பணம், பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார்.

சொந்த செலவில் பொங்கல் பரிசு வழங்கிய அதிமுக கவுன்சிலர்
சொந்த செலவில் பொங்கல் பரிசு வழங்கிய அதிமுக கவுன்சிலர்

By

Published : Jan 8, 2023, 7:53 PM IST

சொந்த செலவில் பொங்கல் பரிசு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அதிமுக கவுன்சிலர்

நாகப்பட்டினம் நகராட்சி 22ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பல் மருத்துவர் மணிகண்டன் உள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வார்டு மக்களுக்கு வழங்கப்படும் என மணிகண்டன் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மணிகண்டனுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்க கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், நாகை மாவட்ட செயலாளருமான ஓ.எஸ். மணியன் 22ஆவது வார்டு மக்களுக்கு ரூ.500 ரொக்கப் பணம், பச்சரிசி , வெல்லம், முந்திரி, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசை வழங்கினார்.

வார்டில் உள்ள 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், 'தமிழ்நாடு தாய்மார்களின் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் மூடு விழா நடத்திவிட்டார், மு.க.ஸ்டாலின். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு தான் திமுக அரசு. போதைப் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்பொருளாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது’ என அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:ஹிஜாப் போராட்டங்களில் கைதான இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - கொந்தளிக்கும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details