மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை அதிபர் தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி, மகன் ஆகியோரை கொலைசெய்து 12.5 கிலோ நகை, ரூ.6.90 லட்சம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதில், தொடர்புடைய வடமாநில கொள்ளையன் மஹிபால்சிங்கை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் மணிஷ், ரமேஷ் பாட்டில், கர்ணாராம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சீர்காழி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சிறையில் இருந்த கொள்ளையர்கள் மூவரையும் நேற்று மயிலாடுதுறை விரைவு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்னிலையில் காவல் துறையினர் முன்னிறுத்திய நிலையில், ஒருநாள் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று (பிப். 11) ஒருநாள் காவல் துறை விசாரணை முடிந்து மூன்று பேரையும் மயிலாடுதுறை நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்பு முன்னிறுத்தினர். அப்போது, கொள்ளையர்கள் மூன்று பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவர்களை நாகை சிறைக்கு கொண்டுசென்றனர்.
இதையும் படிங்க:சீர்காழி இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளை காவல்துறை விசாரிக்க அனுமதி!