மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு காவல்துறை, கடலோர காவல் துறையுடன் இணைந்து, பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுப்பது குறித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வேதாரண்யம் கடற்கரையில் கடற்படையின் ஒத்திகை நிகழ்ச்சி! - operation 'C' Vigil show at nagapattinam
நாகப்பட்டினம்: வேதாரண்யம் கடற்கரையில் ஆப்பரேஷன், 'சி' விஜிலில் என்ற பெயரில், கடற்படையின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்
இந்நிகழ்ச்சி ஆப்பரேஷன், 'சி' விஜில் என பெயரில் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று (ஜன-12) தொடங்கி நாளை மாலை வரை இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில், கடற்கரை பகுதிகளில் திரிந்த புதிய நபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரிப்பது போலவும், ரோந்து படகுகளில் கண்காணிப்பது போலவும் தத்ரூபமாக செய்து காட்டியதால், பார்வையாளர்களை இது வெகுவாக கவர்ந்தது.