கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட அரசுத் துறைகளுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவில் சில விதிமுறைகள் தளர்த்தப்படும் என முதலமைச்சர் எடிப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
பதிவு செய்யவந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் அதன்படி இன்று (திங்கள்கிழமை) நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படத் தொடங்கப்பட்டது. அங்கு அரசு அறிவித்துள்ள 16 நலவாரிய உறுப்பினர்களுக்கான நிவாரணத் தொகை பெறுவதற்காக அமைப்புசாரா தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் ஏராளமானோர் தங்கள் உறுப்பினர்கள் அட்டை, அரசு கேட்டுள்ள விவர ஆவணங்களுடன் வந்து தங்கள் பெயர்களைப் பதிவுசெய்தனர்.
இதனால் கடந்த 27 நாள்களுக்கு மேலாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நாகை வட்டாட்சியர் அலுவலகம் இன்று மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி - வெறிச்சோடிய நாகை பத்திரப்பதிவு அலுவலகம்