மயிலாடுதுறை:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கன்னியாமூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
பள்ளி வாகனங்கள், உடைமைகளுக்குத் தீவைக்கப்பட்டு கற்கள் வீசி தாக்குதல் நடைபெற்றது. தனியார் பள்ளி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் தனியார் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு தனியார்ப் பள்ளி தாளாளர் நலச்சங்கம் அறிவித்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 50 சதவீத பள்ளிகள் வழக்கம்போல் இயக்கம் இது குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.குடியரசு இந்த தகவலைத் தெரிவித்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்குகின்றன.
மாவட்டத்தில் 55 மெட்ரிக் பள்ளிகளும் ஐந்து சிபிஎஸ்சி பள்ளிகளும் உள்ள நிலையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படுகின்றன.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி தாளாளர் உள்பட மூவர் கைது