கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மொத்தம் 800 மாணவர்கள் தயாராக உள்ளனர். அவர்களை தயார் செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் அப்பள்ளி ஆசிரியர்கள், பாடம் நடத்தி வருகின்றனர். இதுதவிர தினந்தோறும் ஆசிரியர்கள் தாங்கள் நடத்தும் பாடத்தினை யூடியூப், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.